/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1399.jpg)
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நாக சைதன்யா. இவர் நடிகை சமந்தாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்பு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர்.இது திரையுலகினர் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து இருவரும் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சமந்தா தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் ஒன்றாக வாழ்ந்த ஹைதராபாத் வீட்டை விலைக்கு வாங்கியுள்ளார். சமந்தா - நாக சைதன்யாவின் பிரிவிற்கு பிறகு அந்த வீடு விற்கப்பட்ட நிலையில் நடிகை சமந்தா தற்போது அந்த வீட்டை வாங்கியவரிடம் இருந்து அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த வீட்டில் தற்போது தனது அம்மாவுடன் சமந்தா வாழ்ந்து வருகிறாராம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)